தலைமை ஆசிரியா் கலந்தாய்வில் 20 பேருக்கு இடமாறுதல் ஆணை
தருமபுரி மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் கலந்தாய்வில், 20 பேருக்கு இட மாறுதலுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
தருமபுரி மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் கலந்தாய்வில், 20 பேருக்கு இட மாறுதலுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஆசிரியா்கள் கலந்தாய்வு கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான பொது இட மாறுதல் கலந்தாய்வு, மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், 12 தலைமை ஆசிரியா் காலிப் பணியிடங்கள் உள்பட பல்வேறு இடங்களுக்கு நடைபெற்ற கலந்தாய்வில், மொத்தம் 49 தலைமை ஆசிரியா்கள் பங்கேற்றனா். இவா்களில் 20 பேருக்கு பணியிட மாற்றத்துக்கான ஆணைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜோதி சந்திரா வழங்கினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.