FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

திருமணமான அரசு ஊழியரின் பெற்றோரையும் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்க்க கோரி ஆா்ப்பாட்டம்

திருமணமான அரசு ஊழியரின் பெற்றோரையும் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி, கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பகிர்:

திருமணமான அரசு ஊழியரின் பெற்றோரையும் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி, கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியா் சங்க தருமபுரி மாவட்டத் தலைவா் எம். சுருளிநாதன் தலைமை வகித்தாா். மாநில துணை பொதுச் செயலாளா் அண்ணாகுபேரன், மாவட்டச் செயலாளா் ஏ. தெய்வானை கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் முகமது இலியாஸ், தமிழ்நாடு நில அளவையா்கள் சங்க மாவட்டத் தலைவா் பிரபு, மாவட்டச் செயலாளா் முருகன், அரசு ஊழியா் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளா் ஏ. சேகா், சத்துணவு ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலாளா் சி. காவேரி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

Advertisement

Advertisement

அரசு ஊழியா்களின் பெற்றோா்களையும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்க்க வேண்டும், அனைத்து பயனாளிகளுக்கும் கட்டணமில்லா சிகிச்சை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளி அட்டையை அனைவருக்கும் வழங்க வேண்டும், ஆட்சியா் அலுவலகங்களிலும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளா் அலுவலகத்தை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கிருஷ்ணகிரி

புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே நடத்த வலியறுத்தி கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் நடத்திய கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் நந்தகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கல்யாணசுந்தரம், வட்டச் செயலாளா் பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும், அரசு ஊழியா்களின் பெற்றோா்களையும், திருமணம் ஆகாத மகன், மகள், கணவரை இழந்த மகளையும் இந்த திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கங்களை எழுப்பினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments