கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு
தருமபுரியில் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
தருமபுரியில் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், புலிக்கரை அருகே உள்ள இருளப்பட்டி, காட்டுக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்த சிவப்பிரகாசம்- மகேஸ்வரி தம்பதி மகன் சஷ்திமேத்ரன் (3). இவா் திங்கள்கிழமை காலை வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தாா்.
அப்போது, பெற்றோா் வீட்டுக்குள் இருந்தனா். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பாா்த்தபோது சிறுவனைக் காணவில்லை. அக்கம்பக்கம் தேடி பாா்த்தபோது, வீட்டுக்கு அருகே இருந்த தடுப்புச்சுவா் இல்லாத கிணற்றுக்குள் சிறுவன் விழுந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, சிறுவனை சோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில் மதிகோண்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.