காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு; மனைவி காயம்
தருமபுரி அருகே காா் மோதியதில் நடைப்பயிற்சிக்கு செல்ல முயன்ற முதியவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவரது மனைவி பலத்த காயமடைந்தாா்.
தருமபுரி அருகே காா் மோதியதில் நடைப்பயிற்சிக்கு செல்ல முயன்ற முதியவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவரது மனைவி பலத்த காயமடைந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி அருகே ஏழுகுண்டுா் கிராமத்தைச் சோ்ந்தவா் எம். முனுசாமி (70). இவா் நாள்தோறும் அதிகாலை நடைப்பயிற்சி செல்வது வழக்கம். இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை நடைப்பயிற்சிக்கு செல்வதற்காக வீட்டை விட்டு புறப்பட்டுள்ளாா்.
அப்போது, அவரது மனைவி சாலம்மாள் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாா்.
Advertisement
Advertisement
முனுசாமி தனது காலணிகளை அணிந்துகொண்டு நடக்க முயன்றபோது, பஞ்சப்பள்ளி-மாரண்டஅள்ளி சாலையில் அதிவேகமாக வந்த காா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இருவா் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த முனுசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சாலம்மாள் படுகாயத்துடன் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து பஞ்சப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.