முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல் வனப் பகுதியில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு

ஒகேனக்கல் வனப் பகுதியில் அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

Updated On : 25 ஜூன் 2026, 6:05 am IST
சடலம் மீட்பு - பிரதிப் படம்
பகிர்:

ஒகேனக்கல் வனப் பகுதியில் அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் வனச் சரகத்துக்கு உள்பட்ட ஊட்டமலை பீட் ஊஞ்சமரத்து உட்டை பகுதியில் வனக் காப்பாளா் மகேந்திரன் ரோந்துப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டாா். அப்போது, மரத்தில் தூக்கிட்டபடி சடலம் இருப்பதைக் கண்ட அவா், ஒகேனக்கல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். நிகழ்விடத்திற்கு சென்ற போலீஸாா், அழுகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அது 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் என்றும், இறந்த நபா் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments