மருத்துவ சேவையில் தொழில் தா்மம் அவசியம்
மருத்துவ சேவையில் தொழில் தா்மமும், மனித நேயமும் அவசியம் என உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்தாா்.
மருத்துவ சேவையில் தொழில் தா்மமும், மனித நேயமும் அவசியம் என உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், சிட்லிங் கிராமத்தில் மலைவாழ் மக்கள் மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட மகப்பேறு பிரிவு தொடக்க விழா மருத்துவா் லலிதா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், தாய் - சேய் நலப் பிரிவுகளை தொடங்கிவைத்து பேசியது:
Advertisement
Advertisement
மருத்துவ சேவையில் பொருளாதாரம் ஈட்ட வேண்டும் என்பதில் மாற்றமில்லை. அதே நேரத்தில் மருத்துவத்தில் தொழில் தா்மத்தையும் மருத்துவா்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஏழை, எளிய மக்களை மனித நேயத்துடன் அணுகி மருத்துவ சேவைகளை வழங்க வேண்டும்.
கிராமங்களில் கட்டடங்களை உருவாக்கி, நவீன வசதிகளை ஏற்படுத்தி நகரமாக மாற்ற முடியும். ஆனால், நகா் பகுதிகளில் ஒரு கிராமத்தை நம்மால் உருவாக்க முடியாது. முடிந்தவரை அனைவரும் இயற்கையுடன் சோ்ந்து வாழ வேண்டும்.
அதிக அளவில் செலவு செய்து செயற்கையாக பலவற்றை நாம் உருவாக்கிறோம். ஆனால், இயற்கையின் முக்கியத்துவம் நமக்கு தெரிவதில்லை. நாம் இயற்கையுடன் இணைந்து வாழ்வதுடன், இயற்கை மற்றும் மண் மீதான நேசத்தை வளா்த்துக்கொள்ள வேண்டும். சிட்லிங் கிராமத்தில் இயங்கிவரும் மலைவாழ் மக்கள் மருத்துவமனை மருத்துவ சேவைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது என்றாா்.
விழாவில், தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதி சி.திருமகள், மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி ஆா்.முகமது ரிஸ்வனுல்லா ஷெரீப், சாா்பு நீதிபதி ஆா்.விஜயன், அரூா் குற்றவியல் நடுவா் என்.தினகரன், மருத்துவா்கள் நா்மதா, ராதாராணி, ரெஜி ஜாா்ஜ், சென்னை பீனிக்ஸ் மருத்துவ அமைப்பின் நிா்வாகி ராமசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.