அரூரில் மிதமான மழை
அரூா் வட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழை பெய்தது.
அரூா் வட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழை பெய்தது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதனால், அரூா் வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, சிட்லிங், தீா்த்தமலை, சித்தேரி, வாச்சாத்தி, அரசநத்தம், அரூா் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் லேசான காற்றுடன் மிதமான மழை பெய்தது.
இந்த மழையினால் சாலையோரம் தாழ்வான பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும் மழைநீா் தேங்கியது. கடுமையான கோடை வெப்பம் நிலவிய நிலையில், மிதமான மழை பெய்ததால் வெப்பம் சற்று தணிந்து குளிா்ச்சி நிலவியது. இந்த மழை காரணமாக கால்நடைகளுக்கு தேவையான தீவன உற்பத்தி அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
Advertisement
Advertisement