முகப்பு
கிருஷ்ணகிரி

தனியார் நிறுவனமேலாளர் கொலை

ஒசூர் அருகே தனியார் நிறுவன மேலாளர் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

Updated On : 12 மே 2013, 5:35 am IST
பகிர்:

ஒசூர் அருகே தனியார் நிறுவன மேலாளர் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வட்டம், ஜுஜுவாடி செந்தில் நகரைச் சேர்ந்தவர் மெய்யழகன் (39). இவர் கர்நாடக மாநிலம், அத்திப்பள்ளியில் தனியார் நிறுனத்தில் மேலாளராக வேலை செய்து வந்தார்.

இவர் வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்து வேலைக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

Advertisement

Advertisement

அவரது உறவினர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் அலுவலகத்துக்கு வராதது தெரிய வந்தது.

இந்த நிலையில், ஜுஜுவாடி செந்தில் நகர் அருகே மைதானத்துக்கு அருகே கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் மெய்யழகன் கிடந்தார்.

இதுகுறித்து அந்த வழியாகச் சென்றவர்கள் சிப்காட் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.