பள்ளி மாணவியை கடத்தியதாக இளைஞர் கைது
பள்ளி மாணவியைக் கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
பள்ளி மாணவியைக் கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி ஊராட்சி, பெருமாள் குப்பம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவியை என்.வெள்ளாளப்பட்டி பகுதியைசேர்ந்த அலாவுதீன் (எ)பூவரசன் கடத்திச் சென்றாராம்.
இதுகுறித்து பெண்ணின் தந்தை ஊத்தங்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து அந்த இளைஞரையும் புதன்கிழமை கைது செய்தனர். மீட்கப்பட்ட பெண்ணை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக போலீஸார் அனுப்பி வைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.