மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது : ரூ.2.47 லட்சம் கோடி கடன்!!
ரூ.2.47 லட்சம் கோடி கடன் இருப்பதாக மின்வாரிய வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ.2.47 லட்சம் கோடி கடன் இருப்பதாக, மின் வாரியத் துறையின் நிதிநிலை குறித்து வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2001ஆம் ஆண்டு முதலான நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்டு அது தொடர்பான விவரங்களை வெளியிட்டு வருகிறார்.
தமிழ்நாடு மின் வாரியத் தலைமை அலுவலகத்தில் தமிழக மின் துறை அமைச்சர், வெள்ளை அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கையில் தமிழக மின்துறையின் நிதி நிலைமை எப்படி உள்ளது, மின்சார வாரியத்தின் நிதி, செலவினங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மின் வாரித்தின் உள்கட்டமைப்பு, மனிதவளம், தளவாடப் பொருள்கள், வருவாய், செலவினம் உள்ளிட்ட விவரங்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. தற்போது மின் துறைக்கு ரூ.34,447 கோடி பற்றாக்குறை இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.