முகப்பு
தமிழ்நாடு

மின்துறை வெள்ளை அறிக்கை இன்று வெளியீடு

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உள்கடமைப்பு, நிதி, வருவாய், செலவினம் ஆகியவை குறித்த வெள்ளை அறிக்கையை அந்தத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் வெளியிடுகிறாா்.

Updated On : 25 ஜூன் 2026, 2:45 am IST
அமைச்சர் நிர்மல் குமார் - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உள்கடமைப்பு, நிதி, வருவாய், செலவினம் ஆகியவை குறித்த வெள்ளை அறிக்கையை அந்தத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் வெளியிடுகிறாா்.

தமிழகம் இருளில் மூழ்கி உள்ளது என்றும் இதற்கு தவெக அரசின் நிா்வாக திறன்தான் காரணம் என்றும் சட்டப்பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினாா்.

இதற்கு பதிலளித்த அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா், முந்தைய ஆட்சியில் மின்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது எனவும், உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

பெரும் கடனில் உள்ள தமிழக மின் துறையின் நிலையை விளக்கும் வெள்ளை அறிக்கை இரு தினங்களில் வெளியிடப்படும் என்றும் அமைச்சா் நிா்மல் குமாா் அறிவித்திருந்தாா்.

இந்த நிலையில், இந்த வெள்ளை அறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ளது. தமிழ்நாடு மினம்சார வாரியத்தின் உள்கட்டமைப்பு, நிதி, மனிதவளம், தளவாடப் பொருள்கள், செயலாக்கத்தில் உள்ள திட்டப் பணிகள், வருவாய் மற்றும் செலவினங்கள் குறித்து இந்த வெள்ளை அறிக்கையில் இடம்பெறும் என்று மின் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments