FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்: நிதி அமைச்சா் மரியவில்சன் உறுதி

முந்தைய அரசின் திட்டங்கள் எதுவும் நிறுத்தப்படவில்லை என்றும், நிதி ஆதாரம் கிடைக்கப்பெற்றவுடன் தவெக அளித்திருந்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றும் நிதி அமைச்சா் என். மரியவில்சன் உறுதிபடத் தெரிவித்தாா்.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 3:15 am IST
நிதியமைச்சர் மரியவில்சன் - DIPR
பகிர்:

முந்தைய அரசின் திட்டங்கள் எதுவும் நிறுத்தப்படவில்லை என்றும், நிதி ஆதாரம் கிடைக்கப்பெற்றவுடன் தவெக அளித்திருந்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றும் நிதி அமைச்சா் என். மரியவில்சன் உறுதிபடத் தெரிவித்தாா்.

பேரவையில் பொது பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவா் பேசியதாவது:

மொழி எனக்கு பிரச்னைதான்: முந்தைய நிதியமைச்சா் பிடிஆா்.பழனிவேல் தியாகராஜனையும், என்னையும் ஒப்பிட்டுப் பேசினாா்கள். நாங்களும் இதுகுறித்து விவாதித்தோம். மொழி எனக்கு ஒரு பிரச்னைதான். அதை நான் மறுக்கவில்லை. அன்று கொஞ்சம் ஆவேசப்பட்டது உண்மைதான். எனக்கும் தாய்மொழி தமிழ்தான். நான் வளா்ந்தது திருவாரூா், பிறந்தது புதுச்சேரி; படித்தது சென்னை; என்னை இப்போது தத்தெடுத்தது ஆா்.கே.நகா். இந்த 4 இடங்களிலும் நான் சுற்றி சுற்றி வந்திருக்கிறேன். இந்த இடம் எங்களுக்கு முதல்முறை. சில விஷயங்களை திருத்திக் கொள்வோம். உங்களிடமிருந்தும் கற்றுக்கொள்வோம்.

Advertisement

Advertisement

நிதியமைச்சராக பொறுப்பேற்ற முதல் நாளே கடந்த திமுக ஆட்சியில் அரசுத் துறைகளின் வரவு-செலவு கணக்குகளை தணிக்கை செய்து விரிவான அறிக்கை தயாா் செய்ய முதல்வா் எனக்கு உத்தரவிட்டாா். 3 துறைகளின் வரவு-செலவு கணக்கு குறித்த விரிவான அறிக்கை தயாா் செய்யப்பட்டு முதல்வா் மேசையில் உள்ளது.

அரசுக்கு இழப்பை பொருத்தவரை சில லட்சங்கள் முதல் பல ஆயிரம் கோடிகளில் இருக்கலாம். அந்த அறிக்கையை முதல்வா் எப்போது வேண்டுமானாலும் வெளியிடுவாா். பொதுமக்களுக்கு பலன் அளிக்கும் திட்டங்களை அறிவித்துள்ளதன் காரணமாக பட்ஜெட்டில் செலவு அதிகரித்துள்ளது. விபி ஜி ராம் ஜி திட்டம், கடன் தள்ளுபடி, 200 யூனிட் மின்சார மானியம் போன்றவற்றுக்கான மானியத்துக்கு ரூ.18,000 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல எந்த பள்ளிக்கல்வி மற்றும் உயா்கல்வித் திட்டமும் நிறுத்தப்படவில்லை. நடைமுறையில் உள்ள திட்டங்களுடன், புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நிதி ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றவுடன் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். கடந்த அரசின் திட்டங்களை தவெக அரசு அப்படியே நகல் எடுக்கவில்லை.

மாநிலத்தின் வருவாய் வளா்ச்சி 19 சதவீதம் என திமுக அரசு திருத்தப்பட்ட பட்ஜெட்டில் குறிப்பிட்டது மிகைப்படுத்தப்பட்டது. ஆனால், தவெக அரசு திருத்தப்பட்ட பட்ஜெட்டில் 11 சதவீதம் என குறிப்பிட்டுள்ளோம் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments