FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கேலி பண்றீங்களா? எனக்கு இப்படித்தான் பேசத் தெரியும்! கோபமடைந்த அமைச்சர் மரியவில்சன்!

மதிமுக எம்எல்ஏ கூறியதற்கு நிதியமைச்சர் மரியவில்சன் கோபமாக பதிலளித்தது பற்றி...

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 4:09 pm IST
மதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன் | அமைச்சர் மரியவில்சன் - TN
பகிர்:

பட்ஜெட் வாசிக்கும்போது சொற்களில் பிழை இருந்ததாக மதிமுக எம்எல்ஏ கூறியதற்கு நிதியமைச்சர் மரியவில்சன் கோபமாக பதிலளித்தார்.

பேரவையில் கடையநல்லூர் மதிமுக எம்எல்ஏ  ராஜேந்திரன் இன்று பேசுகையில், "நிதி அமைச்சர் பட்ஜெட்டை வாசிக்கும்போது நான் தமிழ் ஆர்வலர், சொற்பொழிவாளர் என்ற முறையில் அவரது பேச்சை உன்னிப்பாகக் கவனித்தேன். அவரின் ஆங்கில உச்சரிப்பு நேர்த்தியாக இருந்தது. தமிழில் சில சொற்றொடர்களை பேசாமல் விட்டுவிட்டார்கள். சில சொற்றொடரில் இலக்கண பிழை இருந்தது.

நான் குறையாகவோ குற்றச்சாட்டாகவோ இதனை அவையின் முன் வைக்கவில்லை. நிதி அமைச்சர் வரும் காலத்தில் பட்ஜெட் வாசிக்க நேர்ந்தால், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

Advertisement

Advertisement

அதற்கு அமைச்சர் மரிய வில்சன், "கொஞ்ச நாள்களாகவே உருவ கேலி செய்வது, சாதி தொடர்பாக, பெண்கள் தொடர்பாக.. என இப்போது மொழி தொடர்பாக வந்துவிட்டார்கள். எனக்கு என்னுடைய கிறிஸ்துவம் ஒன்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அன்பு, அமைதி, இரக்கத்தின் மொழி. இது தமிழ் படித்தவர்களுக்குக் கூடத் தெரியாது.

60 -75 நாள்களாக துறைரீதியாக கூட்டங்கள் வைத்தார்கள். அதில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். 15, 000 கோடி ரூபாய் கரூவூலத்திற்கு வந்திருக்கிறது.

அதைப்பற்றி எல்லாம் பேசாமல், 'நீங்கள் இப்படி பேசுங்கள்' என்று அறிவுரை கூற வேண்டாம். என்னுடைய தனித்துவம் இது. எனக்கு இப்படித்தான் பேச தெரியும். ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்காக என்னை மாற்றிக்கொள்ள முடியாது. நான் அப்படிதான் பேசுவேன். என்னுடைய ஸ்டைல் இதுதான். கேலி பண்றீங்களா?' என்று கேட்டார்.

உடனே பேரவைத் தலைவர் "நீங்கள் மக்கள் புரிந்துகொள்ளும் வகையில்தான் பேசினீர்கள். அவர் சொன்னதை நீங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். பெரிய பிரச்னையாக்க வேண்டாம். பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நிதி அமைச்சர் கோவப்படாதீர்கள்" என்றார்.

இதனால் அவையில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

summary

Finance Minister Maria Wilson angry response to MDMK MLA's statement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments