மேற்கு வங்கம்: மமதா ஆதரவு எம்எல்ஏ கார் மீது கற்கள், முட்டைகள் வீச்சு!
மேற்கு வங்கத்தில் மமதா ஆதரவு எம்எல்ஏ கார் மீது கும்பலைச் சேர்ந்தவர்கள் கற்கள், முட்டைகள் வீசிய சம்பவம் பற்றி....
மேற்கு வங்கத்தில் மமதா ஆதரவு எம்எல்ஏ கார் மீது கும்பலைச் சேர்ந்தவர்கள் கற்கள், முட்டைகள் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. குணால் கோஷ் ஸ்ரீராம்பூரில் கட்சித் தலைவர் மமதா பானர்ஜியின் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றபோது, அவரது கார் மீது கற்களும் முட்டைகளும் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
உத்தர்பாரா பகுதியில், கருப்புக் கொடிகளை ஏந்தியவாறு கோஷின் வாகனத்தைச் சூழ்ந்துகொண்ட அந்த கும்பல் 'கருப்புக் கொடியைக் காட்டியதோடு திரும்பிச் செல் என முழக்கங்களையும் எழுப்பியதாகக் கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்தார். பின்னர் அவர்கள் கார் மீது முட்டைகளையும் கற்களையும் வீசியதாக அவர் கூறினார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து குணால் கோஷ் கூறுகையில், "இது காட்டு ராஜ்ஜியம். அவர்கள் எனது கார் மீது கற்களையும் முட்டைகளையும் வீசி சாலையை மறித்தனர். அங்கு போலீஸார் யாரும் இல்லை. நான் இப்போது கொல்கத்தாவுக்குத் திரும்பிச் செல்கிறேன், புகார் அளிக்க நேராக லால் பஜார் அல்லது பவானி பவனுக்குச் செல்வேன்" என்றார்.
இந்தத் தாக்குதலில் காரின் பின் பக்கக் கண்ணாடி உடைந்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். இந்தச் சம்பவம் பாஜகவின் கைவரிசை என்று மமதா ஆதரவு தலைவர்கள் தெரிவித்தனர். இதனால் மேற்கு வங்கத்தில் பரபரப்பு நிலவியது.
Stones and eggs were allegedly hurled at TMC MLA Kunal Ghosh's car in West Bengal's Hooghly district on his way to Serampore on Saturday to attend a meeting of party supremo Mamata Banerjee.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.