பாஜகவின் வெற்றி சமூக ஊடகங்களால் அல்ல; 275 எம்எல்ஏ ஆதரவு! - மே.வங்க முதல்வர் பேச்சு!
மேற்கு வங்க சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் பாஜகவுக்கு 275 எம்எல்ஏக்கள் ஆதரவு அளிப்பார்கள் என முதல்வர் சுவேந்து அதிகாரி பேச்சு...
மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் 275 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜக அரசுக்கு ஆதரவு அளிப்பார்கள் என முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி அணியைச் சேர்ந்த 64 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்பட 275 சட்டப்பேரவை உறுப்பினர்களும் பாஜக அரசுக்கு ஆதரவு அளிப்பார்கள் என முதல்வர் சுவேந்து அதிகாரி கூறியுள்ளார்.
கொல்கத்தா துர்கா பூஜையில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் பலியான ஒருவரின் குடும்பத்தை முதல்வர் சுவேந்து அதிகாரி இன்று (அக். 21) நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
Advertisement
Advertisement
அப்போது, அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
“பாஜக சமூக ஊடகங்களாலோ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாலோ வெற்றி பெறவில்லை. நான் மமதா பானர்ஜியை பவானிபூரில் தோற்கடித்தேன். சஜால் கோஷ் (பாஜக எம்எல்ஏ) சமூக ஊடகங்களால் வெற்றி பெறவில்லை. நம்முடைய சநாதன அரசை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
நாளையே சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கட்டும். எங்களுக்கு 275 உறுப்பினர்கள் ஆதரவளிப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 208 இடங்களை வென்ற பாஜக முதல்முறை அம்மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ளது.
இந்தத் தேர்தலில், தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சி அமைத்திருந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெறும் 80 இடங்களை மட்டும் பெற்று தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
Chief Minister Suvendu Adhikari has said that 275 MLAs will support the BJP government if a trust vote is held in the West Bengal Assembly.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.