டெங்கு குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை: மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி
மேற்கு வங்கத்தில் டெங்கு நிலைமை குறித்து முதல்வர் சுவேந்து அதிகாரி விளக்கம்....
மேற்கு வங்கத்தில் டெங்கு நிலைமை குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்று முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
டெங்கு நிலைமை குறித்து தவறான தகவல்களைப் பரப்பி பொதுமக்களிடையே தேவையில்லாத பீதியைக் கிளப்ப வேண்டாம் என்றும் ஊடகங்களையும் அவர் கேட்டுக்கொண்டார்.
கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மேற்கு வங்கத்தில் டெங்கு குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை. ஜனவரி முதல் 18 பேர் டெங்குவால் பலியாகியுள்ளனர். நாங்கள் மே 9ஆம் தேதி ஆட்சிக்கு வந்தோம் என்று தெரிவித்தார்.
Advertisement
Advertisement
மேலும் தற்போது கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களை உள்ளடக்கி மாநிலம் முழுவதும் 210 டெங்கு நோயாளிகள் மட்டுமே உள்ளனர். தவறான தகவல்களைப் பரப்பாதீர்கள், இது தேவையற்ற பீதியை ஏற்படுத்தும்.
சுகாதார செயலர் அல்லது தலைமைச் செயலரிடம் பேசுங்கள் எனவும் குறிப்பிட்டார்.
West Bengal Chief Minister Suvendu Adhikari on Friday said there was no need to worry about the dengue situation in the state, as only 18 deaths have been reported since January and 210 patients are currently undergoing treatment.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.