முகப்பு

மேற்கு வங்கத்தின் பெயர் மாற்ற தீர்மானத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்!

மேற்கு வங்கத்துக்கு பச்சிம் பங்கா எனப் பெயர் மாற்றும் தீர்மானத்துக்கு அந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறித்து...

மேற்கு வங்கத்தின் பெயர் மாற்ற தீர்மானத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்!
சுவேந்து அதிகாரி
பகிர்:

மேற்கு வங்கத்துக்கு பச்சிம் பங்கா எனப் பெயர் மாற்றும் தீர்மானத்துக்கு அந்த மாநில அமைச்சரவை திங்கள்கிழமை (நவ. 23) ஒப்புதல் அளித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகாலமாக ஆட்சி செய்து வந்த மமதா பானர்ஜி தலைமையிலான அரசை கடந்த தேர்தலில் பாஜக வென்றது. இதைத் தொடர்ந்து, முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, அரசின் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில், வங்க மொழியில் ஏற்கெனவே 'பச்சிம் பங்கா' (மேற்கு வங்கம்) என்றே அழைக்கப்பட்டு வந்தாலும், ஆங்கிலத்தில் 'வெஸ்ட் பெங்கால்’ என்று பயன்படுத்தப்பட்டு வந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இனி அனைத்து மொழிகளிலும் ஒரே பெயரைப் பயன்படுத்தும் வகையில் ஆங்கிலத்திலும் பச்சிம் பங்கா என்றே பயன்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்துக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வரும் டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது.

மேலும், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு, மத்திய அரசின் ஒப்புதலுக்கும் நாடாளுமன்றத்தின் சட்ட நடைமுறைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The West Bengal state cabinet has approved a resolution to rename the state 'Paschim Banga'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.