FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மேற்கு வங்கத்தில் இருந்து திரிணமூல் காங்கிரஸின் பெயர், சின்னம் அழிந்துவிட்டன: முதல்வர் சுவேந்து அதிகாரி

நந்திகிராம் இடைத்தேர்தலையொட்டி பாஜக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் சுவேந்து அதிகாரி மேற்கொண்ட பிரசாரம் பற்றி...

முதல்வர் சுவேந்து அதிகாரி.
பகிர்:

திரிணமூல் காங்கிரஸின் பெயர், சின்னம் மேற்கு வங்கத்தில் இருந்து அழிந்துவிட்டதாக முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

நந்திகிராம் இடைத்தேர்தலையொட்டி பாஜக வேட்பாளர் ஹசிராணி ரத்தை ஆதரித்து வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவர், திரிணமூல் காங்கிரஸின் பெயரும் சின்னமும் மாநிலத்தில் இருந்து அழிந்துவிட்டன என்றார்.

மாநிலத்தில் நடைபெற்ற ஊழல் வழக்குகளில் பல குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதைக் குறிப்பிடுகையில், யாருடைய பெயரையும் நேரடியாகக் குறிப்பிடாமல், பிரதான திருடனும் சிறைக்குச் செல்வான் என்று அவர் கூறினார்.

Advertisement

Advertisement

இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து எதிரணி வேட்பாளர்களும் வைப்புத்தொகையை இழப்பதை மக்கள் தங்கள் வாக்கின் மூலம் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பூர்வ மெதினிபூரின் நந்திகிராம் மற்றும் முர்ஷிதாபாத்தின் ரெஜினகர் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மேற்கு வங்கத்தில், முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவால், நடைபெறவுள்ள நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு அக்கட்சியின் சின்னம் மற்றும் பெயரைத் தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது.

இதையடுத்து மமதா பானர்ஜி பிரிவுக்கு ‘மமதா அனைத்திந்திய திரிணமூல் காங்கிரஸ்’ எனும் பெயரும், கால்பந்து வீரர் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

summary

West Bengal Chief Minister Suvendu Adhikari on Friday said the name and symbol of the Trinamool Congress have been erased from the state.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments