27 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு மமதாவே பொறுப்பு: சுவேந்து அதிகாரி குற்றச்சாட்டு!
மேற்கு வங்கத்தில் 27 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு மமதா பானர்ஜியே பொறுப்பு என அந்த மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டியது குறித்து...
மேற்கு வங்கத்தில் 27 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு மமதா பானர்ஜியே பொறுப்பு என அந்த மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பிருந்தே, வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) மீது மமதா பானர்ஜி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
எஸ்ஐஆர் என்ற பெயரில் தகுதியுள்ள லட்சக்கனக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகக் குர்றம்சாட்டி, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது.
Advertisement
Advertisement
இதைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கைக்கு இரு தேர்தல் ஆணையர்கள் பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சட்டத்துக்கு புறம்பாக தன்னிச்சையாக நடைமுறைப்படுத்தியதாக செய்திகள் வெளியானதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதுகுறித்து சுவேந்து அதிகாரி பேசியதாவது:
வாக்காளர் பட்டியலிலிருந்து 27 லட்சம் பெயர்களை நீக்கியதற்கான பொறுப்பு மமதா பானர்ஜியையே சாரும். பாஜகவையோ அல்லது தேர்தல் ஆணையத்தையோ அல்ல.
கேரளத்தில் எஸ்ஐஆர் நன்றாக இருந்தால், மேற்கு வங்கத்தில் ஏன் மோசமாக இருக்கிறது? நாங்கள் 208 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். அதே நேரத்தில் இரு தரப்பினரும் (திரிணமூல் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள்) 80 இடங்களையே பெற்றுள்ளனர். மமதா பானர்ஜியால் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தார்.
Suvendu Adhikari has accused Mamata Banerjee of being responsible for the removal of 27 lakh voters in West Bengal.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.