FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

4 லட்சம் விவசாயிகளுக்கு மின் மானியம்: மேற்கு வங்கத்தில் அதிரடி அறிவிப்பு!

விவசாயிகளுக்கு மின் மானியம் பற்றி..

25 செப்டம்பர் 2026, 4:10 pm IST
சுவேந்து அதிகாரி
பகிர்:

மேற்கு வங்கத்தில் உள்ள சுமார் நான்கு லட்சம் விவசாயிகளுக்கு ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ. 2 மானியம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.

பூர்வ பர்தமான் மாவட்டத்தில் நடைபெற்ற நிர்வாக ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர்,

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ. 6,000-யிலிருந்து ரூ. 9,000 ஆக உயர்த்தப்படும்.

Advertisement

Advertisement

விவசாயிகள் விற்பனை செய்ய விரும்பும் அனைத்து நெல்லையும் மாநில அரசே கொள்முதல் செய்யும், குவிண்டாலுக்கு ரூ. 2,700 என்ற குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதை உறுதி செய்யும்.

இடைத்தரகர்களுக்கோ அல்லது முகவர்களுக்கோ இதில் இடமிருக்காது.

விவசாயிகளின் பாதுகாவலர்களாக எம்எல்ஏக்கள் செயல்படுவார்கள். முந்தைய அரசு விவசாயிகளைத் துன்புறுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார்.

நடப்பு நிதியாண்டில் மாநில அரசு ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

பணியாளர் நியமன நடைமுறை வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments