மர்மமான முறையில் 15 ஆடுகள் சாவு
பென்னாகரம் அருகே ஏரியூர் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றுவந்த 15 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்தன.
பென்னாகரம் அருகே ஏரியூர் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றுவந்த 15 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்தன.
தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே மஞ்சாரஅள்ளி ஊராட்சிகுள்பட்ட செம்மேடு பகுதியைச் சேர்ந்த குண்டாசேவி மகன் பழனிசாமி (44). விவசாயம் செய்து வரும் இவர், சொந்தமாக 40 ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் திங்கள்கிழமை காலை மேய்ச்சலுக்காக அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றுவிட்டு நண்பகலில் வீட்டின் அருகில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து தண்ணீர் அருந்த வைத்துள்ளார்.இதையடுத்து 15 ஆடுகள் ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி விழுந்து உயிரிழந்தன. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சாக்கப்பன் மற்றும் கால்நடை மருத்துவர் திவ்யபாரதி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதில் ஆடுகள் அனைத்தும் விஷச் செடிகளை உண்டதால் இறந்துள்ளதாக கால்நடை மருத்துவர் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.