முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் லாரியில் தீ விபத்து

ஒசூரில் லாரி  தீப்பற்றி எரிந்ததில் பல லட்சம் மதிப்புள்ள ரப்பர்கள் எரிந்து சேதமடைந்தன.

Updated On : 23 ஜனவரி 2019, 9:38 am IST
பகிர்:

ஒசூரில் லாரி  தீப்பற்றி எரிந்ததில் பல லட்சம் மதிப்புள்ள ரப்பர்கள் எரிந்து சேதமடைந்தன.
ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள் கான்,  கமலேஷ், மற்றும் சபீர் ஆகியோர் அம்மாநிலம் பானிப் பட்டு பகுதியில் இருந்து கடந்த 5 நாள்களுக்கு முன்பு 19 டன் ரப்பர் மூலப் பொருள்கள்,  5 டன் உல்லன் போர்வைகளை ஏற்றிக் கொண்டு ஒசூர் வழியாக கேரள மாநிலத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.
அதிகாலை 3 மணியளவில்  ஒசூர் வந்த லாரியின் ஓட்டுநர்கள் உல்லன் போர்வைகளை   தளி சாலையில் பழைய ஏஎஸ்டிசி  குடியிருப்பு அருகில் இறக்கிக் கொண்டிருந்தபோது லாரியின்  மேல் பகுதி திடீரென தீப்பற்றி எரிவதைக் கண்டு  இறங்கி தப்பினர். 
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர்  தீயணைக்கும்  பணியில் ஈடுபட்டனர்.  லாரியில் இருந்த ரப்பர் சீட்டுகள் மளமளவென எரிந்தன. இதையடுத்து தேன்கனிக்கோட்டை யில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு  தீயணைக்கும் பணி நடைபெற்றது.  இந்த தீ விபத்தில்  லாரி முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இந்த விபத்தின் காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. விபத்தில் எவ்வித உயிர்சேதமும் ஏற்படவில்லை. இது குறித்து ஒசூர் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.