முகப்பு
கிருஷ்ணகிரி

தைப்பூசம்: அலங்கரிக்கப்பட்ட  தேரில் முருகன் திருவீதி உலா

கிருஷ்ணகிரி  அருகே  உள்ள காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயிலில் தைப்பூச விழாவையொட்டி, அலங்கரிக்கப்பட்ட  தேரில் சுவாமி  திருவீதி உலா நடைபெற்றது.

Updated On : 23 ஜனவரி 2019, 9:36 am IST
பகிர்:

கிருஷ்ணகிரி  அருகே  உள்ள காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயிலில் தைப்பூச விழாவையொட்டி, அலங்கரிக்கப்பட்ட  தேரில் சுவாமி  திருவீதி உலா நடைபெற்றது.
கிருஷ்ணகிரியை  அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் உள்ள ஆஞ்சநேய சுப்பிரமணி சுவாமி கோயிலில் தைப்பூச விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து இரவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில்,  சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. 
இந்த தேர்ப் பவனியானது சென்னை சாலை, வட்டச் சாலை, காந்தி சிலை சாலை வழியாக  பெருமாள் கோயிலை சென்றடைந்தது. பின்னர் காட்டிநாயனப்பள்ளி கோயிலை சென்றடைந்தது. அப்போது, சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த பக்தர்கள் உப்பு, மிளகு, சில்லறை காசுகளை வீசி, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். தேர் திருவீதி உலாவையொட்டி, ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.