சுண்டம்பட்டி புனித அந்தோணியார் ஆலய தேர்த் திருவிழா
கிருஷ்ணகிரியை அடுத்த சுண்டம்பட்டி புனித அந்தோணியார் ஆலய தேர்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரியை அடுத்த சுண்டம்பட்டி புனித அந்தோணியார் ஆலய தேர்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சுண்டம்பட்டியில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய தேர்த் திருவிழாவையொட்டி மே 28-ஆம் தேதி தருமபுரி மறைமாவட்ட முதன்மை குரு அம்புரோஸ் தலைமையில் திருப்பலி, மறையுரை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 29-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரையில் சிறப்பு தவநாள் திருப்பலிகள் நடைபெற்றன.
ஜூன் 2-ஆம் தேதி, புதுநன்மை, உறுதிபூசுதல் திருவிழா திருப்பலி ஆகியவை தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயாஸ் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து, காவேரிப்பட்டணம் சாந்திமாதா ஆலய பங்குத்தந்தை தேவசகாயம் தலைமையில் கூட்டுப்பாடற் பலியும், புனிதரின் அலங்கார தேர்ப்பவனியும் நடைபெற்றன. ஜூன் 3-ஆம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.