முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சின்னத்திரை: மலையாளத்திலும் கொண்டாடப்படும் சீரியல்கள்!

தமிழ்நாட்டில்தான் சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம் என்றொரு கருத்து முன்பு இருந்தது. சித்தி', மெட்டி ஒலி' ஆகிய தொடர்கள் இங்கு சக்கைப் போடு போட்டது நினைவிருக்கலாம்.

Updated On : 7 ஜூன் 2026, 4:12 am IST
பகிர்:

தமிழ்நாட்டில்தான் சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம் என்றொரு கருத்து முன்பு இருந்தது. சித்தி', மெட்டி ஒலி' ஆகிய தொடர்கள் இங்கு சக்கைப் போடு போட்டது நினைவிருக்கலாம். கடைசியாக சன் டிவியில், ரோஜா' தொடர் சுமார் எட்டு ஆண்டுகளாக ஒளிபரப்பானது. ஆனால், மலையாள சீரியல் ஏரியாவிலும் தொடர்கள் பிரபலம்.

கடந்த ஏழு வருடங்களாக அங்கு ஒளிபரப்பாகி வந்த மெளன ராகம்' தொடர், தற்போது முடிவடைந்திருக்கிறது. இந்த தொடர் தொடர்புடைய இன்னொரு செய்திதான் இங்கு ஹைலைட். மலையாள மெளன ராக'த்தின் ஹீரோயினாக சுமார் 1700 எபிசோடுகள் வரை நடித்தது நம்மூர்ப் பொண்ணு ஐஸ்வர்யா ராம்சாய்.

தொகுப்பாளர் மகேஸ்வரி சோலோவாக பெர்ஃபார்ம் செய்யும் முதல் சிங்கிள் ஆல்பம் சாங்கை அண்மையில் விஜய் சேதுபதி வெளியிட்டு இருக்கிறார். சேட்டிலைட் சேனல் தொடங்கிய புதிதில் ஆங்கராக டிவி-க்குள் வந்தவர், பிறகு சீரியல்களில் நடித்தார். சினிமாவில் காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிந்தார். சில படங்களிலும் நடித்தார். மீடியாவில் ஆளையே பார்க்க முடியவில்லை. விசாரித்த போது அவர் கர்நாடகாவுக்குப் போய் செட்டில் ஆகிவிட்டதாகக் கூறப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில் திடீரென மியூசிக் ஆல்பம் மூலம் ரீ என்ட்ரியா? என அவரிடம் கேட்ட போது, சென்னையில்தான் இருந்தேன். மகனின் கோடை விடுமுறைக்காக கர்நாடகத்தில் இருக்கிறேன். விரைவில் சென்னைக்கு வந்து விடுவேன்' என்கிறார்.

நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருமான தினேஷ் சின்னத்திரையில் சீரியல், ரியாலிட்டி ஷோ எனப் பல ஏரியாக்களில் தலைகாட்டி வந்தார். இவரது சொந்த ஊர் திருவில்லிபுத்தூர். சென்னை வந்து லயோலா கல்லூரியில் மீடியா படிப்பை முடித்த தினேஷ் தொடர்ந்து சின்னத்திரையில் நுழைந்தார். விஜய் டிவியின் பல ஹிட் சீரியல்களில் நடித்திருக்கும் இவர் பிக்பாஸ் சீசன் 7-இல் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று வரை வந்தார்.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கருப்பு' திரைப்படம் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தில் த்ரிஷா, நட்டி, ஸ்வாசிகா என முக்கிய நட்சத்திரங்கள் பலரும் நடித்திருக்கிறார்கள். முன்னதாக இந்தப் படத்தில் தானும் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்ததாகவும், ஆனால் அது எடிட்டிங்கில் கட் ஆகி விட்டதாகவும் நம்மிடம் வருத்தப்பட்டிருந்தார் சின்னத்திரை நடிகை ஆனந்தி.

அவரிடம் பேசினால், நான் நடித்த காட்சிகள் எதற்காக எடுக்கப்பட்டது என்றே தெரியவில்லை. கஷ்டப்பட்டு நடித்தேன். அதன் பலனை அடையாமல் செய்து விட்டனர். அடுத்தடுத்த படங்களில் பார்க்கலாம்' எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.