FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இனி வாரத்தின் 7 நாள்களும் ஒளிபரப்பாகும் 3 தொடர்கள்!

வாரத்தின் அனைத்து நாள்களும் ஒளிபரப்பாகும் 3 தொடர்கள் குறித்து...

Updated On : 20 ஜூலை 2026, 1:36 pm IST
அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை தொடர்களின் போஸ்டர்கள். - படம்: எக்ஸ்
பகிர்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2, சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை ஆகிய 3 தொடர்களும் இனி வாரத்தின் 7 நாள்களும் ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வந்த ஹேப்பி வைஃப் ஹேப்பி லைஃப் நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில், இந்த மாற்றத்தை சேனல் நிர்வாகம் எடுத்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2

Advertisement

Advertisement

பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடரில் நடிகை நிரோஷா, ஸ்டாலின் முத்து, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ், வி.ஜே. தங்கவேல் கந்தசாமி, ஆகாஷ் பிரேம்குமார், சக்தி, ராஜ்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடர் இன்று(ஜூலை 20) முதல் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

அய்யனார் துணை

விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை தொடர், டிஆர்பி புள்ளிகள் அதிகம் பெற்று முன்னணி தொடராக இருந்து வருகிறது. மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்தத் தொடரில் மதுமிதா, அரவிந்த் சேஜு ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும், அரவிந்தின் சகோதரர்களாக முன்னா, பர்வேஷ், அருண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நடிகர் ரோசரி, இவர்களுக்குத் தந்தையாக நடிக்கிறார்.

அய்யனார் துணை தொடர் இனி வாரத்தின் 7 நாள்களும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

சிறகடிக்க ஆசை

கூட்டு குடும்பத்தில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்தி நகைச்சுவை கலந்து சிறகடிக்க ஆசை தொடர் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

விகடன் நிறுவனம் தயாரிக்கும் இந்தத் தொடரை எஸ். குமரன் இயக்கி வருகிறார். இந்தத் தொடரில் வெற்றி வசந்த், கோமதி பிரியா, இயக்குநர் ஆர். சுந்தரராஜன், அனிலா ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

சிறகடிக்க ஆசை தொடர் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

It has been announced that the three serials currently airing on Vijay TV Pandian Stores 2, Siragadikka Aasai, and Ayyanar Thunai will henceforth be broadcast seven days a week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments