காதலனை அறிமுகம் செய்த அய்யனார் துணை நடிகை மதுமிதா!
எதிர்நீச்சல், அய்யனார் துணை நடிகை மதுமிதா, தனது காதலனை அறிமுகம் செய்துள்ளது குறித்து...
அய்யனார் துணை நடிகை மதுமிதா, காதலனை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார்.
மாலை 5 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் எனக் குறிப்பிட்டு விடியோ வெளியிட்டிருந்த நிலையில், இன்று மாலை காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார்.
திரையில் தனக்கு அன்பும் ஆதரவும் அளித்ததைப்போன்று, தனிப்பட்ட வாழ்க்கையில் எடுக்கும் அடுத்தகட்ட முயற்சிக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என ரசிகர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Advertisement
Advertisement
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் முதல் பாகத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மதுமிதா. ஜனனி என்ற பாத்திரத்தில் இவரின் நடிப்பு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அய்யனார் துணை தொடரிலும் நாயகியாக மதுமிதா நடித்து வருகிறார். இத்தொடரில் நிலா என்ற பாத்திரத்தில் மதுமிதா நடித்து வருகிறார்.
இத்தொடரும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் அதிக டிஆர்பி பெறும் தொடர்களில் முதன்மை இடத்தில் அய்யனார் துணை உள்ளது.
இதற்கு முன்பு நடித்த எதிர்நீச்சல் தொடரும் டிஆர்பி புள்ளிப் பட்டியலில் முதன்மையான இடத்தில் இருந்ததால், மதுமிதா நடிக்கும் தொடர்கள் மிகப்பெரிய ஹிட் அடிப்பதாகவும், ராசியான நடிகை எனவும் பலர் புகழ்ந்து வருகின்றனர்.
அய்யனார் துணை தொடரில் நடித்ததற்காக சிறந்த நடிகை மற்றும் சிறந்த ஜோடிக்கான விருதையும் மதுமிதா வென்றிருந்தார்.
இதனிடையே புதிய அப்டேட்டை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுகிறேன் என மதுமிதா விடியோ வெளியிட்டிருந்தார். புதிய தொடரிலோ அல்லது சினிமா வாய்ப்பு குறித்தோ அறிவிக்கப்போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த வேளையில், தனது காதலனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
மை பூக்கி எனக் குறிப்பிட்டு காதலனுடன் லண்டனில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். சின்ன திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் மதுமிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Ethirneechal ayyanar thunai serial actress madhumitha introduce her lover with insta fans
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.