FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திருமணம், காதல் ஏதும் இல்லை.... பாடல் வெளியீடு குறித்து அறிவித்த அய்யனார் துணை நடிகை மதுமிதா!

அய்யனார் துணை நடிகை மதுமிதாவின் பாடல் வெளியீடு குறித்து...

மதுமிதா - பாலாஜி - படம்: இன்ஸ்டாகிராம்
பகிர்:

அய்யனார் துணை நாயகி மதுமிதா மற்றும் பாலாஜி நடனமாடியுள்ள சுயாதீன பாடல் குறித்த அறிவிப்பை, நடிகை மதுமிதா அறிவித்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் முதல் பாகத்தில் நாயகியாக நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை மதுமிதா. இவர் தெலுங்கில் ஒருசில தொடர்கள் நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

எதிர்நீச்சல் முதல் பாகம் தொடர், டிஆர்பியில் முன்னணியில் இருந்ததுடன், இவரின் நடிப்புக்கு சிறப்பான அங்கீகாரமும் விருதும் கிடைத்தது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அய்யனார் துணை தொடரில் நாயகியாக மதுமிதா நடித்து வருகிறார். இத்தொடரில் நிலா என்ற பிரதான பாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார்.

அண்மையில், நடிகை மதுமிதா தனது புதிய பயணம் குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

நடிகை மதுமிதா, திரைப்பட வாய்ப்பு குறித்து அறிவிக்கவுள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர். சிலர், தனிப்பட்ட வாழ்க்கைப் பயணத்தின் அடுத்தகட்ட அறிவிப்பு என்றும் மதுமிதாவுக்கு செப். 30 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல் பரப்பி வந்தனர்.

இந்த நிலையில், இவற்றுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, லண்டனில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் சுயாதீன இசைப் பாடல் குறித்த அறிவிப்பை மதுமிதா வெளியிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் பாடியுள்ள இந்தப் பாடல், அக். 7 ஆம் தேதி சரிகம செளத் யூடியூப் சேனலில் வெளியாகவுள்ளது.

summary

Actress Madhumitha has announced an independent song featuring herself and Balaji.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments