அய்யனார் துணை படப்பிடிப்பில் தீபாவளி கொண்டாடிய மதுமிதா!
அய்யனார் துணை படப்பிடிப்பு தளத்தில் இருந்தவாறு நடிகை மதுமிதா தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அய்யனார் துணை படப்பிடிப்பு தளத்தில் இருந்தவாறு நடிகை மதுமிதா தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் முதல் பாகத்தில் நாயகியாக நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை மதுமிதா. இவர் தெலுங்கில் ஒருசில தொடர்கள் நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
எதிர்நீச்சல் முதல் பாகம் தொடர், டிஆர்பியில் முன்னணியில் இருந்ததுடன், இவரின் நடிப்புக்கு சிறப்பான அங்கீகாரமும் விருதும் கிடைத்தது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அய்யனார் துணை தொடரில் நாயகியாக மதுமிதா நடித்து வருகிறார். இத்தொடரில் நிலா என்ற முக்கிய பாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார்.
இந்தத் தொடரும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, டிஆர்பியிலும் முன்னணியில் உள்ளது. இந்நிலையில், தீபாவளியிலும் படப்பிடிப்பு தளத்தில் இருந்தவாறு ரசிகர்களுக்கு வாழ்த்து கூறி விடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த விடியோவில் ரசிகர்கள் பலரும் மதுமிதாவுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் இவர் நடனத்தில் வெளியான பூக்கி பாடல், ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.