FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திருமண தேதியை அறிவித்த அய்யனார் துணை நாயகி மதுமிதா!

அய்யனார் துணை நடிகை மதுமிதாவின் திருமண தேதி அறிவிப்பு குறித்து...

மதுமிதா - பாலாஜி திருமால் - படம்: இன்ஸ்டாகிராம்
பகிர்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை தொடரில், பிரதான பாத்திரத்தில் நடித்து வரும் மதுமிதா, தன்னுடைய திருமண தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் முதல் பாகத்தில் நாயகியாக நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை மதுமிதா. இவர் தெலுங்கில் ஒருசில தொடர்கள் நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

எதிர்நீச்சல் முதல் பாகம் தொடர், டிஆர்பியில் முன்னணியில் இருந்ததுடன், இவரின் நடிப்புக்கு சிறப்பான அங்கீகாரமும் விருதும் கிடைத்தது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அய்யனார் துணை தொடரில் நாயகியாக மதுமிதா நடித்து வருகிறார். இத்தொடரில் நிலா என்ற பிரதான பாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார்.

இந்தத் தொடரும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, டிஆர்பியிலும் முன்னணியில் உள்ளது.

இதனிடையே, அண்மையில் நடிகை மதுமிதா தனது நீண்ட நாள் காதலனை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக அறிவித்திருந்தார்.

இவர், கடந்த செப். 24 ஆம் தேதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னுடைய காதலன் பாலாஜி திருமால் உடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார்.

இந்த நிலையில், மதுமிதா - பாலாஜி திருமால் ஜோடியின் திருமணம் வரும் செப். 30 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காதலனை அறிமுகப்படுத்திய சிறிது நாள்களிலேயே திருமண தேதியையும் நடிகை மதுமிதா அறிவித்துள்ளார்.

மதுமிதா - பாலாஜி திருமால் ஜோடிக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

summary

Madhumitha, who plays a lead role in the Vijay TV serial Ayyanar Thunai, has officially announced her wedding date.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments