FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கவனம் ஈர்க்கும் அய்யனார் துணை நாயகி மதுமிதாவின் பூக்கி பொன்னம்மா பாடல்!

மதுமிதாவின் பூக்கி பொன்னம்மா பாடல் வெளியீடு குறித்து...

8 அக்டோபர் 2026, 5:21 pm IST
மதுமிதா - பாலாஜி - படம்: எக்ஸ்
பகிர்:

முதல்முறையாக லண்டனில் படமாக்கப்பட்ட ‘பூக்கி பொன்னம்மா’ சுயாதீன பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த சுயாதீன இசைப் பாடலில் அய்யனார் துணை நாயகி மதுமிதா - பாலாஜி ஆகியோர் நடனமாடி இருக்கின்றனர்.

ஸ்டோரி கல்ச்சர் நிறுவனம் தயாரிப்பில், சரிகம நிறுவனம் வெளியீட்டில், பாலாஜி – மதுமிதா நடிப்பில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement

பிரபல நடன இயக்குநர் சசி மாஸ்டர் இந்தப் பாடலை இயக்கியதுடன், நடன அமைப்பையும் மேற்கொண்டுள்ளார். பாடலுக்கு ஏஜே இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார், ஸ்நேகா ஆகியோர் பாடியுள்ளார். . பாடலுக்கான வரிகளை K.U. கார்த்திக் எழுதியுள்ளார்.

‘பூக்கிபொன்னம்மா’ சுயாதீன பாடலின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று(அக். 7) நடைபெற்றது. படக்குழு தெரிவித்தபடி, லண்டனில் முழுமையாக படமாக்கப்பட்ட முதல் ஆல்பம் பாடல் என்ற சிறப்புடன் இந்தப் பாடல் உருவாகியுள்ளது.

இதில் ‘பூக்கி பொன்னம்மா’ பாடல் குழுவினருடன், திரையுலகம் மற்றும் சின்ன திரையைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அய்யனார் துணை தொடரில் நாயகியாக மதுமிதா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

The independent song Pookie Ponnamma, filmed in London for the first time, has been released and is capturing the attention of fans.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments