
பிக் பாஸை விட்டுப் போகும் வரை பயம் இருக்கனும்! ஜேசனை மிரட்டிய ஷமா!
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் காமன்மேன் போட்டியாளர்கள் ஷமா - ஜேசன் மோதிக்கொண்டது குறித்து...

ஷமா , ஜேசன் - இன்ஸ்டாகிராம்
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் வரை என் மீதான பயம் இருக்க வேண்டும் என ஜேசன் கெளசிக்கை ஷமா மிரட்டியுள்ளார்.
முயல் டாஸ்க் போட்டியின்போது ஷமாவிடம் நெருங்கி அவரை வீழ்த்தும் முயற்சியில் ஜேசன் ஈடுபட்டிருந்த நிலையில், போட்டியில் இருந்து வெளியேறிய பிறகு ஷமா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 3 வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்துக்கான ஆளும் அணியின் தலைவராக அவினாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராகவ் எதிரணி தலைவராக உள்ளார்.
இந்த வாரத்தின் மத்தியில் முயல் டாஸ்க் போட்டி வைக்கப்பட்டது. அதாவது முயல் வேடமணிந்து அனைவரும் போட்டியில் பங்கேற்க வேண்டும். போட்டியாளர்கள் கையில் ஸ்டாம்ப் கொடுக்கப்பட்டிருக்கும். போட்டியாளர்கள் ஒருவர் முதுகில் மற்றொருவர் ஸ்டாம்ப் குத்த வேண்டும். அதிக ஸ்டாம்ப் முதுகில் வாங்கிய போட்டியாளர் வெளியேற்றப்படுவார். குறைந்த ஸ்டாம்ப் முதுகில் வாங்கியவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
இப்போட்டியில் ஒருகட்டத்தில் ஷமா மயக்கமடைந்துவிட்டார். அவருக்கு சக போட்டியாளர்கள் உதவி செய்தனர். அவர் எழுந்து நின்றதும், அவர் முதுகில் ஜேசன் ஸ்டாம்ப் குத்தினார். இதற்கு ஷமா உள்பட சக போட்டியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
உடல் நிலை தேறிய பிறகு விளையாடலாம், அதுவரை பொறுக்குமாறு அறிவுறுத்தினர். ஆனால், பேசிக்கொண்டு இருக்கும்போதே ஷமா, நடிகர் வினோத் பாபு முதுகில் ஸ்டாம்ப் குத்தினார். இதனால், அவர் மயக்கமடைந்ததப்போன்று நாடகமாடியதாக சிலர் கூறினர்.

ஷமா , ஜேசன்
இதனிடையே அதிக ஸ்டாம்ப் வாங்கியதால் ஷமா வெளியேற்றப்பட்டார். அப்போது பேசிய ஷமா, ஜேசனை கடுமையாக விமர்சித்தார்.
வளர்ந்து கெட்டவன் என்றும், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் வரை என் மீது பயம் இருக்க வேண்டும் எனவும் கூறி அநாகரிகமாகப் பேசினார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
Summary
Bigg boss 10 tamil shama jeson clash errupts in rabbit task
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







