புதிய தொடரில் இணைந்த அய்யனார் துணை தொடர் நடிகை!
அய்யனார் துணை தொடர் நடிகை தீப்தி புதிய தொடரில் இணைந்தது குறித்து...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை தொடரில் நடித்து வரும் நடிகை தீப்தி கபில், சுற்றும் விழி சுடரே தொடரில் இணைந்துள்ளார்.
பாரதி கண்ணம்மா தொடரில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமான நடிகை வினுஷா தேவி. இவர், சுற்றும் விழி சுடரே என்ற தொடரில் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்.
வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிக்கும் இந்தத் தொடரில் நாயகனாக நடிகர் யுவன் மயில்சாமி நடிக்கிறார். வினுஷா தேவியின் மகளாக பேபி தன்ஷிகா குழந்தை நட்சத்திரமாக நடிக்கிறார்.
Advertisement
Advertisement
சிறையில் இருந்து பெண் குழந்தையை வளர்க்க, வினுஷா எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
இந்த நிலையில், தொடரின் விறுவிறுப்பைக் கூட்டுவதற்காக புதிய பாத்திரத்தை சுற்றும் விழி சுடரே தொடர் குழு அறிமுகம் செய்துள்ளது.
சுற்றும் விழி சுடரே தொடரில், சந்தியா பாத்திரத்தில் நடிகை தீப்தி கபில் நடிக்கிறார். இந்தத் தொடரில் நடிகை தீப்தி இணைந்துள்ளதால், தொடரின் கதைக்களத்தில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சின்ன திரையில் தொகுப்பாளினியாக தனது பயணத்தைத் தொடங்கி, அடுத்தடுத்து சின்ன திரை தொடர்களில் நடித்து வருபவர் நடிகை தீப்தி கபில்.
ஜீ தமிழில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பான செம்பருத்தி தொடரிலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலா தொடரிலும் இவர் நடித்திருந்தார். தற்போது அய்யனார் துணை தொடரில் நடித்து வருகிறார்.
Actress Deepthi, known for her role in the Vijay TV series Ayyanar thunai, has joined the serial Sutrum Vizhi Sudare.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.