கயல் தொடரில் இருந்து சஞ்ஜீவ் திடீர் விலகல்?
கயல் தொடரில் இருந்து நடிகர் சஞ்ஜீவ் விலகியதாகத் தகவல்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரிலிருந்து, நடிகர் சஞ்ஜீவ் விலகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தொடரில், சைத்ரா ரெட்டி, சஞ்ஜீவ், மீனாகுமாரி, ஷியாம் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்தத் தொடர், திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது.
Advertisement
Advertisement
இந்தத் தொடரை பி. செல்வம் இயக்கி வருகிறார். கயல் தொடர் 1500 எபிசோடுகளை நெருங்கியுள்ளது.
இதனிடையே, கயல் தொடரின் கதைக்களத்தில் மாற்றம் செய்யப்பட்டு புதிய பாத்திரங்களை தொடர் குழு அறிமுகம் செய்தது.
அவள் சந்தியா, ரியா விஸ்வநாதன், பேபி ஜாய்ஸ், ஜிஷ்ணு மேனன் உள்ளிட்டோரின் வருகையால், தொடரின் கதை மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில், கயல் தொடரின் நாயகன் சஞ்ஜீவ், இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது. திடீர் விலகல் குறித்து சஞ்ஜீவ் தரப்பில் இருந்து எந்தவொரு விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை.
நீண்ட நாள்களாக, கயல் தொடரில், சஞ்ஜீப் தொடர்பான காட்சிகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Reports indicate that actor Sanjeev has quit the serial Kayal, which airs on Sun TV.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.