விரைவில் நிறைவடைகிறது கயல் தொடர்! முடிவடையும் தேதி இதுதான்!
கயல் தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது தொடர்பாக...
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடர், விரைவில் நிறைவடையவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
கடந்த 2021 அக். 21 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிவரும் கயல் தொடர், திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்தத் தொடர், 1500 நாள்களைக் கடந்தும், 5 ஆண்டுகளை நெருங்கியும் ஒளிபரப்பாகி வருகிறது.
Advertisement
Advertisement
இந்தத் தொடரில், சைத்ரா ரெட்டி, சஞ்ஜீவ், மீனாகுமாரி, ஷியாம் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்தத் தொடரை பி. செல்வம் இயக்கி வருகிறார்.
தந்தையை இழந்த கயல் என்ற கடின உழைப்பாளிப் பெண்ணுக்கு வரும் அனைத்து தடைகளையும் எப்படி தைரியமாக எதிர்கொள்கிறாள் என்பதை மையப்படுத்தி கயல் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, கயல் தொடரின் கதைக்களத்தில் மாற்றம் செய்யப்பட்டு, புதிய பாத்திரங்களை தொடர் குழு அறிமுகம் செய்தது.
அவள் சந்தியா, ரியா விஸ்வநாதன், பேபி ஜாய்ஸ், ஜிஷ்ணு மேனன் உள்ளிட்டோரின் வருகையால், தொடரின் கதை மாற்றப்பட்டு, விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில், கயல் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது. வரும் அக். 22 ஆம் தேதியுடன் இந்தத் தொடர் முடிவடையும் என்று கூறப்படுகிறது.
Reports indicate that the serial Kayal, currently airing on Sun TV, is set to conclude soon.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.