1000 நாள்களைக் கடந்த புது வசந்தம் தொடர்! இந்த வார இறுதியில் நிறைவடைகிறது!
புது வசந்தம் தொடர் நிறைவடையவுள்ளது தொடர்பாக...
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புது வசந்தம் தொடர் 1000 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
ஷியாம் மற்றும் சோனியா சுரேஷ் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்து வரும் தொடர் புது வசந்தம். பகல் நேரத்தில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில் அதிக ரசிகர்களைப் பெற்ற தொடராக இந்தத் தொடர் உள்ளது.
கடந்த ஜூலை 2023 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை ஒளிபரப்பாகும் இந்தத் தொடர், 1000 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
Advertisement
Advertisement
ஒற்றைப் பிள்ளையாக வளர்ந்த நாயகி, கூட்டுக்குடும்பத்தில் மருமகளாகச் சென்று, அங்கு சந்திக்கும் சவால்களையும், கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரின் அன்பை எவ்வாறு பெறுகிறாள் என்பதை மையப்படுத்தியும் இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்தத் தொடரில், வைஷ்ணவி, கௌதமி வேம்புநாதம், சாந்தி வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தத் தொடரை அருள்ராய் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், புது வசந்தம் தொடர், இந்த வார இறுதியில் அதாவது செப். 26 ஆம் தேதி சனிக்கிழமை இந்தத் தொடர் நிறைவடைகிறது.
வரும் செப். 28 ஆம் தேதி முதல் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு குறிஞ்சி தொடர் ஒளிபரப்பாக உள்ளது. அபிராமி தொடர் பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The serial Pudhu Vasantham, currently airing on Sun TV, has crossed the 1000 episode mark.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.