குதுகல கொண்டாட்டத்துடன் நிறைவு பெற்ற புது வசந்தம் தொடர்!
புது வசந்தம் தொடர் நிறைவடைந்தது தொடர்பாக...
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த புது வசந்தம் தொடர் நேற்று(செப். 26) நிறைவடைந்தது.
கடந்த ஜூலை 2023 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை ஒளிபரப்பாகி வந்த புது வசந்தம் தொடர், 1003 நாள்களுடன் முடிந்தது.
ஷியாம் மற்றும் சோனியா சுரேஷ் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்து வந்த இந்தத் தொடர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, டிஆர்பியிலும் முன்னணியில் இருந்து வந்தது.
Advertisement
Advertisement
மேலும் இந்தத் தொடரில், வைஷ்ணவி, கௌதமி வேம்புநாதம், சாந்தி வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வந்தனர். இந்தத் தொடரை அருள்ராய் இயக்கி இருந்தார்.
இந்த நிலையில், புது வசந்தம் தொடர் 1003 நாள்களுடன் நேற்று முடிந்தது. இந்தத் தொடரின் கதைப்படி ஷியாம் மற்றும் சோனியா சுரேஷ் ஜோடிக்கு வளைக்காப்பு நிகழ்ச்சி நடப்பதுபோல காட்சியமைக்கப்பட்டு, குதுகல கொண்டாட்டத்துடன் தொடர் நிறைவு பெற்றது.
கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த புது வசந்தம் தொடர் நிறைவு பெற்றது, ரசிகர்களுக்கு சற்று சோகத்தை ஏற்படுத்தினாலும், இறுதிக்கட்ட காட்சிகள் சிறப்பாக இருந்ததாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வரும் செப். 28 ஆம் தேதி முதல் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு குறிஞ்சி தொடர் ஒளிபரப்பாக உள்ளது.
அபிராமி தொடர் பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The serial Pudhu Vasantham, which had been airing on Sun TV, concluded yesterday (Sept. 26).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.