FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

500 நாள்களை நிறைவு செய்த அய்யனார் துணை தொடர்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அய்யனார் துணை தொடர் 500 நாள்களை நிறைவு செய்துள்ளது குறித்து...

2 செப்டம்பர் 2026, 4:09 pm IST
மதுமிதா , அரவிந்த் சேஜு - இன்ஸ்டாகிராம்
பகிர்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அய்யனார் துணை தொடர் 500 எபிஸோட்களை நிறைவு செய்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியின் தொடர்களில் அதிக டிஆர்பி புள்ளிகளைப் பெற்று பட்டியலிலும் முதன்மையான இடத்தில் இத்தொடர் இருந்து வருகிறது. இதனால் 500 நாள்களை வெற்றிகரமாக நிறைவு செய்த தொடர் என்ற பெருமையை அய்யனார் துணை பெற்றுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு அய்யனார் துணை தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. எளிமையான குடும்பப் பிண்ணனியில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதால், ஏராளமான ரசிகர்களை இத்தொடர் கவர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

எதிர்நீச்சல் தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை மதுமிதா அய்யனார் துணையில் நாயகியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அரவிந்த் சேஜு நடித்து வருகிறார். இவர்களுடன் அரவிந்தின் சகோதரர்களாக முன்னா, பர்வேஷ், அருண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நடிகர் ரோசரி, இவர்களுக்குத் தந்தையாக நடிக்கிறார்.

மக்கள் மனம் கவர்ந்த தொடரான இதில், கதாபாத்திரங்களின் பெயர்கள் சேரன், சோழன், பாண்டியன், பல்லவன், வானதி என இதிகாச கதாபாத்திரங்களின் பெயர்களாக வைக்கப்பட்டுள்ளது இத்தொடரின் சிறப்பாக உள்ளது.

தற்போது அடுத்தடுத்து திருமண காட்சிகள் இத்தொடரில் இடம்பெற்று வருவதால், பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இத்தொடர் வெற்றிகரமாக 500 நாள்களை நிறைவு செய்துள்ளது.

இத்தனை நாள்களைக் கடந்திருந்தாலும், விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக அய்யனார் துணை தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. இத்தொடரின் தெலுங்கு மொழி மறுஉருவாக்கமும் ஆந்திரம், தெலங்கானாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

summary

Actress Madhumitha Ayyanar Thunai serial completes 500 days in vijay tv

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments