தனக்குத்தானே பிறந்தநாள் கொண்டாடிய சீரியல் நடிகை!
தனிமையில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை குறித்து...
சின்ன திரை நடிகை கிருத்திகா தனக்குத்தானே கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். தனிமையில் அவர் கொண்டாடிய பிறந்தநாள் புகைப்படங்களை ரசிகர்களுடன் அவர் பகிர்ந்துள்ளார்.
தெலுங்கு சின்ன திரையில் பிரபல நடிகையாக உள்ள கிருத்திகா, தமிழில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற அய்யனார் துணை தொடரின் தெலுங்கு மொழி மறு உருவாக்கத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
தமிழில் நடிகை மதுமிதா நடித்துவரும் பாத்திரத்தில் தெலுங்கில் கிருத்திகா நடித்து வருகிறார். ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இத்தொடருக்கு மகுவா ஓ மகுவா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
2024 முதல் ஒளிபரப்பாகிவரும் இத்தொடர், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழில் அய்யனார் துணைக்கு இருப்பதைப் போன்று தெலுங்கிலும் இந்தத் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
பெங்களூருவில் பிறந்த கிருத்திகா, தெலுங்கு சின்ன திரையில் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் இதற்கு முன்பு தெலுங்கு பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துகொண்டார்.
இதன் தொடர்ச்சியாக பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு ரசிகர்கள் பலரைக் கவர்ந்துள்ளார். இவர் தற்போது தனது 24 வது பிறந்தநாளை இன்று கொண்டாடியுள்ளார்.
பொதுவாக நட்பு வட்டத்தைக் கூட்டி இன்ப அதிர்ச்சியுடன் பிறந்தநாள் கொண்டாடும் நடிகைகளுக்கு மத்தியில் கிருத்திகா தனிமையில் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் பலர் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Ayyanar thunai telugu remake serial actress Kruthika Umashankar celebrate birthday
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.