முகப்பு
செய்திகள்

கெளரி தொடர் நிறைவடையும் தேதி இதுதான்!

கெளரி தொடர் நிறைவடையும் தேதி குறித்து வெளியான தகவல்.

Updated On : 4 ஜூலை 2026, 1:57 pm IST
கெளரி தொடர் காட்சி. - படம்: இன்ஸ்டாகிராம்
பகிர்:

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கெளரி தொடரின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்துள்ளது.

கெளரி தொடரில் பிரதான பாத்திரங்களில் சம்யுக்தாவும், நரேஷ் ஈஸ்வரும் நடித்து வருகின்றனர். பத்மாவதி திரைக்கதை எழுத, பரமேஷ்வர் இத்தொடரை இயக்குகிறார்.

துர்கா என்ற கிராமத்து பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் தீமைகளை, தெய்வசக்தி எப்படிக் காப்பாற்றுகிறது என்பதை மையப்படுத்தி இந்தத் தொடரின் கதை எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இத்தொடரை, இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைய தலைமுறையினரும் விரும்பிப் பார்க்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பிரபலம் நடிகை சுஜிதா, கருமாரி அம்மனாக சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். ரோஜா தொடர் நாயகி பிரியங்கா நல்காரியும் இணைந்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில், கெளரி தொடரின் பரபரப்பான இறுதி அத்தியாயத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சிகள் ஜூலை 25 ஆம் தேதி ஒளிபரப்பு செய்யப்பட்டு தொடர் முடிக்கப்படும் என்ற தகவல் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments