அபிராமி தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிப்பு!
புதிதாக ஒளிபரப்பாகவுள்ள அபிராமி தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...
சன் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள அபிராமி தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
செப். 28 ஆம் தேதி முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு இத்தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
சன் தொலைக்காட்சியில் குறிஞ்சி, அபிராமி என இரு தொடர்கள் அடுத்தடுத்து புதிதாக ஒளிபரப்பாகவுள்ளன. குறிஞ்சி தொடரில் ஆனந்த ராகம் சீரியல் புகழ் அனுஷா ஹெக்டே நாயகியாக நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக விஜய் விஸ்வா நாயகனாக நடிக்கிறார்.
Advertisement
Advertisement
குடிகார தந்தையை சமாளித்து, தன் குடும்பத்தினரை முன்னேற்றப் போராடும் ஒரு பாசம் மிகுந்த சகோதரியின் கதையை மையமாக வைத்து இந்தத் தொடர் உருவாகியுள்ளது.
இதேபோன்று முழுக்க முழுக்க நடுத்தர வயது பெண்ணியின் தியாகத்தை மையப்படுத்தி அபிராமி தொடர் எடுக்கப்படுகிறது. திருமணத்துக்குப் பிறகு கணவரையும் புகுந்த வீட்டையும் கவனித்துக்கொண்டு தன்னுடைய சுயத்தை இழக்கும் நடுத்தர வயது பெண்ணின் கதையாக அபிராமி தொடர் உருவாகிறது.
இத்தொடரின் முன்னோட்ட விடியோ வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது செப். 28 ஆம் தேதி முதல் இத்தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
இரவு நேரத்தில் இத்தொடர் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிற்பகல் 1 மணிக்கு இத்தொடர் ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Broadcast time for the Abirami series announced
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.