FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆனந்த ராகம் தொடர் நாயகியின் புதிய சீரியல்! ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

குறிஞ்சி தொடரின் ஒளிபரப்பு தேதி குறித்து...

25 வினாடிகள் முன்பு
பகிர்:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள குறிஞ்சி தொடரின் ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் ஏராளமான தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனுஷா ஹெக்டே. இவர் தமிழில் ஆனந்த ராகம் தொடரில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

இந்த நிலையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள குறிஞ்சி தொடரில் நடிகை அனுஷா ஹெக்டே, அகிலா என்ற பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்.

Advertisement

Advertisement

மேலும் இந்தத் தொடரில் விஜய் விஷ்வா, ஜீவிதா, சரத், மிதுன், கோகுல், பத்மசேனா, ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

வாழ்க்கை மாறும் என்று லட்சியத்தோடு காத்திருக்கும் பெண்ணுக்கும், முரட்டுத்தனமான ஆணுக்கும் இடையே ஏற்படும் மோதல், பின்னாளில் எப்படி காதலாக மாறுகிறது என்பதை மையப்படுத்தி குறிஞ்சி தொடரின் கதை எடுக்கப்படுகிறது.

சன் தொலைக்காட்சியில் வரும் செப். 28 ஆம் தேதி முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு குறிஞ்சி தொடர் ஒளிபரப்பாக உள்ளது.

புதிய தொடரான அபிராமி பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. 1 மணி நேரம் ஒளிபரப்பாகி வரும் புது வசந்தம் தொடர், இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ள நிலையில், புதிய இரு தொடர்கள் ஒளிபரப்பாகவுள்ளது.

summary

The broadcast date for the Kurinji serial, set to air on Sun TV, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments