FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அய்யனார் துணை சீரியலில் பாக்கியலட்சுமி தொடர் நடிகை! பெருகும் எதிர்பார்ப்பு!

அய்யனார் துணை சீரியலில் பாக்கியலட்சுமி தொடர் நடிகை இணைந்திருப்பது தொடர்பாக...

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 1:15 pm IST
அய்யனார் துணை தொடர் - இன்ஸ்டாகிராம்
பகிர்:

அய்யனார் துணை சீரியலில் பாக்கியலட்சுமி தொடர் நடிகை கம்பம் மீனா இணைந்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அய்யனார் துணை தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு அய்யனார் துணை தொடர் ஒளிபரப்பாகி வருகிறது

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடர் டிஆர்பி புள்ளிகள் அதிகம் பெற்று, முன்னணி தொடராக இருந்து வருகிறது. மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisement

Advertisement

நான்கு சகோதரர்கள் உள்ள வீட்டின் மகனை, திருமணம் செய்துகொண்டு அந்த வீட்டில் நாயகி சந்திக்கும் சவால்களை மையமாக வைத்து இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இத்தொடரில் எதிர்நீச்சல் தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை மதுமிதா நாயகியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அரவிந்த் சேஜு நடித்து வருகிறார். இவர்களுடன் அரவிந்தின் சகோதரர்களாக முன்னா, பர்வேஷ், அருண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நடிகர் ரோசரி, இவர்களுக்குத் தந்தையாக நடிக்கிறார்.

கம்பம் மீனா - ரோசரி

இந்த நிலையில், அய்யனார் துணை தொடரில் நடிகை கம்பம் மீனா இணைந்துள்ளார். இவர் ரோசரியின் முன்னாள் காதலி பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்கள் இவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி தொடர்களில் இணைந்து நடித்திருந்தனர்.

நடிகை கம்பம் மீனாவின் நடிப்பு, நகைச்சுவைக் கலந்து ரசிக்கும்படியாக இருக்கும் என்பதால், இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இவரின் வருகையால், அய்யனார் துணை தொடரில் பல திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Actress Kambam Meena, known for the serial Baakiyalakshmi, has joined the serial Ayyanar Thunai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments