விரைவில் நிறைவடைகிறது புது வசந்தம் தொடர்!
விரைவில் நிறைவடையவுள்ள புது வசந்தம் தொடர்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புது வசந்தம் தொடர் விரைவில் நிறைவடைகிறது.
கடந்த ஜூலை 2023 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு புதுவசந்தம் தொடர் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
ஒற்றைப் பிள்ளையாக வளர்ந்த நாயகி, கூட்டுக்குடும்பத்தில் மருமகளாகச் சென்று, அங்கு சந்திக்கும் சவால்களையும், கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரின் அன்பை எவ்வாறு பெறுகிறாள் என்பதை மையப்படுத்தியும் இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இத்தொடரில் ஷியாம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக சோனியா சுரேஷும் நடிக்கின்றனர்.
மேலும் இந்தத் தொடரில், வைஷ்ணவி, கௌதமி வேம்புநாதம், சாந்தி வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
பீகாக் ஸ்டுடியோஸ் மற்றும் சன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இந்தத் தொடரை அருள்ராய் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், புது வசந்தம் தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் இறுதிக்கட்ட காட்சிகள் விரைவில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
The serial Pudhu Vasantham, currently airing on Sun TV, is coming to an end soon.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.