FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் செல்ல அனுமதி! குவிந்த பக்தர்கள்!

சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக...

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 8:50 am IST
சொரிமுத்து அய்யனார் கோயில் - கோப்புப்படம்
பகிர்:

சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் செல்ல, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அந்தக் கோயிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில், புதன்கிழமை (ஆக. 12) ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுவதையொட்டி, மாவட்டநிர்வாகம், உள்ளாட்சித் துறை, வனத்துறை, இந்து சமய அறநிலை துறை ஆகியவை சார்பில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையொட்டி, பயணிகள், பக்தர்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டும், பாதுகாப்புக் கருதியும் அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்வதற்கு வனத்துறையினர் ஆக. 7, 8 ஆகிய இரண்டு நாள்கள் தடை விதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து வெள்ளிக்கிழமை (ஆக. 7) பாபநாசம் வனச் சோதனைச் சாவடி மூடப்பட்டு, பொதுமக்கள் அப்பகுதிகளில் செல்லத் தடை விதிக்கப்பட்டது.

இன்று ஞாயிற்றுக்கிழமை (ஆக. 9) ஒரு நாள் மட்டும் பக்தர்கள் தங்களது வாகனங்களில் கோயிலுக்குச் செல்லலாம். ஆக. 10 முதல் 13 ஆம் தேதி வரை தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அகஸ்தியா்பட்டியிலிருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் மட்டுமே செல்லலாம்.

இந்த நிலையில், நேற்று(ஆக. 8) இரவு முதலே பாபநாசம் சோதனைச் சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், அதிகாலையில் அனுமதி தொடங்கியதும் கோயிலுக்குச் சென்றுள்ளனர்.

திருவிழா முடிந்த பின்னர், ஆக. 14 ஆம் தேதி பக்தர்கள் தங்களது வாகனங்களில் உடைமைகளை கோயிலில் இருந்து எடுத்துச் செல்லலாம். ஆக. 15 , 16ஆம் தேதிகளில் மீண்டும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், பொதுமக்கள் அங்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

summary

With permission granted to visit the Sorimuthu Ayyanar Temple, devotees have flocked to the temple.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments