FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நூல் அரங்கம்

மனங்கவரும் மலையாள சினிமா

கேரளத்தில் மலையாள திரைப்படங்கள் குறித்து குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் சினிமா இதழ்களில் எழுதிய விரிவான கட்டுரைகளைத் தொகுத்து இந்த நூலை நூலாசிரியர் எழுதியுள்ளார்.

Updated On : 27 ஜூலை 2026, 3:43 pm IST
பகிர்:

மனங்கவரும் மலையாள சினிமா - முனைவர் அ. பிச்சை; பக். 208; ரூ. 260; கபிலன் பதிப்பகம், மதுரை - 625 020. ✆ 98430 08113.

கேரளத்தில் மலையாள திரைப்படங்கள் குறித்து குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் சினிமா இதழ்களில் எழுதிய விரிவான கட்டுரைகளைத் தொகுத்து இந்த நூலை நூலாசிரியர் எழுதியுள்ளார்.

கேரள திரைப்படங்களின் தோற்றம் தொடங்கி விடுதலைக்குப் பின்னர் திரைப்படங்களின் எழுச்சி, புதிய தலைமுறைத் திரைப்படங்கள், திரையிசையும் பாடலும், குறிப்பிடத்தகுந்த நடிப்புக் கலைஞர்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல பகுதிகள் மனம் கவருகின்றன. உலக அரங்கில் கவனம் பெற்ற மலையாள மொழி திரைப்படங்களுக்கு அடியுரமாக, அஸ்திவாரமாக பல கலைஞர்கள் தங்களது ஒப்பில்லாத பங்களிப்பைச் செய்திருப்பதை விரிவாக அறியலாம்.

Advertisement

Advertisement

திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த நாகர்கோவில் அருகேயுள்ள அகஸ்தீஸ்வரத்தில் 'மலையாள திரைப்படத் துறையின் தந்தை' என்றழைக்கப்படும் ஜே.சி. டேனியல் பிறந்தது தொடங்கி திருவாங்கூர் நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனத்தை தொடங்கியதிலிருந்து அனைத்து விவரங்களுக்கும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

நடிகர்கள் பிரேம் நசீர், செம்மீன் சத்யன், மது, அடூர் பாசி, கோபி, மம்மூட்டி, மோகன்லால், ஷாஜி, எம்.ஜி.ஆர்., நடிகைகள் ஷீலா, நவ்யா நாயர், ஊர்வசி, பிரியங்கா நாயர், அனுராதா, ரீமா கல்லிங்கல், நித்யா மேனன் ஆகியோர் மலையாள திரைத்துறையின் வளர்ச்சிக்கு தந்த பங்களிப்புகள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இயக்குநர்கள் அடூர் கோபாலகிருஷ்ணன், பாலு மகேந்திரா, பத்மராஜன், ரஞ்சித், ப்ரியதர்ஷன் உள்ளிட்டோரின் கற்பனை மிகுந்த கதையாக்கங்கள் படிக்கப் படிக்க சுவாரஸ்யம். 1971-ஆம் ஆண்டு தொடங்கி 2026 -ஆம் ஆண்டு வரை மலையாள திரைத்துறையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த திரைப்படங்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments