FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சென்னையின் விரிவாக்கம் (இலக்கியம் - சினிமா வழிப் பதிவுகள்)

கைவண்டி ரிக்ஷா முதல் இன்றைய மெட்ரோ ரயில் வரையிலான போக்குவரத்துத் துறையின் வளர்ச்சிகளுடன், சென்னையின் முக்கிய இடங்கள், அடையாளங்கள் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

25 வினாடிகள் முன்பு
பகிர்:

சென்னையின் விரிவாக்கம் (இலக்கியம் - சினிமா வழிப் பதிவுகள்) - (தொகுப்பாசிரியர்) முனைவர் அ. பிச்சை; பக். 244; ரூ. 300; கபிலன் பதிப்பகம், மதுரை-625 020. 98651 07237.

16-ஆம் நூற்றாண்டில் சென்னாப்பட்டினம் என்ற சிற்றூர் அடுத்தடுத்த ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து, உலக அளவில் புகழ் பெற்ற மாநகராக உள்ளது. ஒரு கிராமம் மாநிலத்தின் தலைநகரமாக உருவான விதமும், பிரிட்டிஷார் முதல் தற்கால ஆட்சியாளர்கள் வரையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் உள்ளன.

பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், பிரபலங்களின் வாழ்த்து மலர்கள், நாவல்கள், திரைப்படங்கள் என்று பல்வேறு வகையில் நூற்றுக்கணக்கானோர் எழுதியவற்றை நூலாசிரியர் திரட்டி நூலாக்கியுள்ளார்.

Advertisement

Advertisement

பூர்விகமான வட சென்னை, மயிலாப்பூரும் திருவல்லிக்கேணியும் என இரு சிறு கிராமங்கள், அடையாறும் தேனாம்பேட்டையும் ஆழ்வார்பேட்டையும் வனப் பகுதிகளாக இருந்தன; தென் சென்னையின் உருவாக்கம், புறநகர் பகுதிகளின் இணைப்பு... என்று ஒவ்வொரு பகுதியும் இணைந்த விதத்தை விரிவாக அறிய முடிகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு பகுதியின் தோற்றமும் வளர்ச்சியும், தொழில் துறையின் வளர்ச்சி, திரைப்படத் துறையின் வளர்ச்சி, கல்வியும் மருத்துவமும் என பல்வேறு துறைகளின் வளர்ச்சி என்று வளர்ந்த விதத்தைக் காணும்போது வியப்பளிக்கிறது.

பட்டினத்தார், வள்ளலார் போன்ற ஆன்மிகப் பெரியோர்கள் வட சென்னையில் தங்கியிருந்ததும், பல ஆன்மிகத் தலங்களின் வரலாறுகளும், மகான்களின் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

கைவண்டி ரிக்ஷா முதல் இன்றைய மெட்ரோ ரயில் வரையிலான போக்குவரத்துத் துறையின் வளர்ச்சிகளுடன், சென்னையின் முக்கிய இடங்கள், அடையாளங்கள் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments