FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விட்டல்ராவ் எனும் கலைச்சுரங்கம்

தமிழர் பண்பாடு, கலாசாரம், கலை, இலக்கியம், தொல்லியல் போன்ற பல்வேறு பிரிவுகளில் தமிழில் முத்திரைப் பதித்த விட்டல்ராவ் நிஜத்தில் கலைச்சுரங்கம்தான் என்பதைப் படித்து முடித்தவுடன் எண்ணத் தோன்றுகிறது.

14 செப்டம்பர் 2026, 6:18 pm IST
பகிர்:

விட்டல்ராவ் எனும் கலைச்சுரங்கம்-எஸ்ஸார்சி; பக். 138; ரூ. 120; குவிகம் பதிப்பகம், சென்னை-600 078; ✆ 97910 69435.

சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று பல்வேறு தளங்களில் முத்திரையைப் பதித்த நாடறிந்த எழுத்தாளரான விட்டல்ராவ் சென்னை தொலைபேசித் துறையில் 35 ஆண்டுகள் பணியாற்றி, தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். அவர் தனது பணிக்காலத்தில் எழுத்துத் துறையில் முத்திரையைப் பதித்ததையும், அவருக்கும் எழுத்தாளர் பாவண்ணன், தனக்கும் உள்ள நட்பின்பால் விட்டல்ராவின் எழுத்துகள் தொடர்பான ஆராய்ச்சியாகவே இந்த நூலை நூலாசிரியர் எழுதியுள்ளார்.

அவரது நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை அலசும் 'சிறுகதைகள்', தொலைபேசித் துறையில் பணியாற்றியபோது தொழிற்சங்கத்தினர் குறித்த 'காம்ரேடுகள்', 'மின்னற்பொழுதுகள் கட்டுரை நூல்', நாவலை கூறும் 'போக்கிடம்', அவரது பணி நாள்கள் குறித்த அனுபவத்தைக் கூறும் 'தொலைபேசி நாள்கள்', கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்ட 'கலையும் காலமும்', பாவண்ணனின் நட்பை அலசும் 'சஹ்ருதயர் விட்டல்ராவ்', அவரது தனித்திறன்களை அலசும் 'விட்டல்ராவ் எனும் கலைச்சுரங்கம்', தமிழகக் கோட்டைகள் குறித்து தெரிவிக்கும் 'கோட்டைகள் ஆய்ந்த விட்டல் ராவ்' எனும் 11 கட்டுரைகள் சிறப்புற உள்ளன.

Advertisement

Advertisement

கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட விட்டல்ராவ் தமிழில் எழுதிக் குவித்துள்ளதைக் காணும்போது அவரது தமிழ்ப் புலமை வியக்க வைக்கிறது. இந்த நூல் அவருடைய ஒட்டுமொத்த படைப்புகளை விவரிப்பதுடன், அவரது படைப்புகளைப் படிக்கத் தூண்டும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது.

தமிழர் பண்பாடு, கலாசாரம், கலை, இலக்கியம், தொல்லியல் போன்ற பல்வேறு பிரிவுகளில் தமிழில் முத்திரைப் பதித்த விட்டல்ராவ் நிஜத்தில் கலைச்சுரங்கம்தான் என்பதைப் படித்து முடித்தவுடன் எண்ணத் தோன்றுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments