FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வாழ்வதில் இருக்கிறது வாழ்க்கை

இன்றைய இளையத் தலைமுறையினர் வாசிக்க வேண்டியதன் அவசியமும், இணையத்தில் இல்லாத அரிதான தகவல்கள் நூல்களில் கிடைக்கின்றன என்று நூலாசிரியர் குறிப்பிடுவதுடன், எண்ணற்ற தகவல்களை இந்த நூலின் வழியாக எடுத்துரைத்துள்ளார்.

14 செப்டம்பர் 2026, 6:08 pm IST
பகிர்:

வாழ்வதில் இருக்கிறது வாழ்க்கை- கிருங்கை சேதுபதி; பக். 152; ரூ. 145; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-600 050. ✆ 044- 26251968.

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவரான நூலாசிரியர் ஓயாத உழைப்பும், வாசிப்பும், இடையறாத எழுத்துப் பணியும் கொண்டவர் என்று சாலமன் பாப்பையாவால் பாராட்டப்பட்டவர். இவர் 2024, 2025-ஆம் ஆண்டுகளில் 'தினமணி' நாளிதழின் ஆசிரியர் உரை பக்கத்தில் எழுதிய 27 கட்டுரைகளின் நூல் வடிவம்தான் இது.

கல்வியின் முக்கியத்துவம், வாசிப்பின் அவசியம், இல்லம்தோறும் நூலகத்தின் அவசியம், நூலகத் திருவிழாக்களின் நோக்கம், வாழ்க்கை வாழ்வதன் அவசியம், 'ரீல்ஸ்'கள் மோகம், அச்சமில்லாமல் வாழ்வது, மூத்தோருக்கு அளிக்க வேண்டிய முக்கியத்துவம், தாமதத்தைத் தவிர்ப்பது, மனக்கவலைகளை அகற்றுதல் என்று ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு விதமான அனுபவத்தைச் சொல்லித் தருகிறது.

Advertisement

Advertisement

இன்றைய இளையத் தலைமுறையினர் வாசிக்க வேண்டியதன் அவசியமும், இணையத்தில் இல்லாத அரிதான தகவல்கள் நூல்களில் கிடைக்கின்றன என்று நூலாசிரியர் குறிப்பிடுவதுடன், எண்ணற்ற தகவல்களை இந்த நூலின் வழியாக எடுத்துரைத்துள்ளார்.

'காலம் முழுதும் கற்போம்' எனும் கட்டுரையில் ஒளவையார், பாரதியார் உள்ளிட்ட சான்றோர்கள் கற்பதன் அவசியம் குறித்து கூறியவற்றைப் பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு பிரச்னைக்கும் திருக்குறளைப் படித்தே தீர்வு காணும் தனது நிர்வாகத் துறை நண்பரின் அனுபவங்களைக் குறிப்பிடும் 'வழிகாட்டும் ஒளிவிளக்கு', தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் தமிழ்ச் சமூக முன்னேற்ற வாழ்க்கை எடுத்துரைக்கும் 'எழுதி முடியாப் பெருவரலாறு!', வள்ளலாரின்ஆன்மிகவழி மக்கள் தொண்டை எடுத்துரைக்கும் 'காலம் தந்த கருணைப் பெருவள்ளல்' உள்ளிட்ட பல கட்டுரைகள் ஒவ்வொருவரும் பலமுறை படித்து உணர வேண்டியவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments