FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தூரத்துப் பச்சை

நாகை அருகே கீழ்வேளூரைச் சேர்ந்த ராஜி ரகுநாதனின் மொழிபெயர்ப்பு சரளமாகவும், தேவையான இடங்களில் தமிழகத்தின் இயல்பான பேச்சுமொழியாகவும் அழகாக அமைந்துள்ளது. நல்ல தொகுப்பு.

7 செப்டம்பர் 2026, 7:11 pm IST
பகிர்:

தூரத்துப் பச்சை- சமகால தெலுங்கு எழுத்தாளர்களின் சிறுகதைகள்- தமிழில்: ராஜி ரகுநாதன்; பக். 188; ரூ. 240; அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பொள்ளாச்சி-642 003. ✆ 04259-236 030.

தெலுங்கில் இப்போது பிரபலமாக உள்ள 13 எழுத்தாளர்களின் 22 சிறுகதைகள் இன்றைய தெலுங்கு இலக்கிய உலகம் எந்த அளவுக்கு சிறப்புடன் உள்ளது என்பதை உணர்த்துகிறது.

சமூக அநீதி, ஜாதிக் கொடுமை, வெளிநாட்டு மோகம், மருத்துவமனைகளின் மோசடி, சட்டத்தின் பாரபட்சம், வாழ்விடத்தின் மீதான பற்றுதல், மருமகள்- மாமியார் கருத்துவேறுபாடு என பல விஷயங்களை இன்றைய தெலுங்கு எழுத்தாளர்கள் மிக நேர்மையாக சொல்லியிருக்கிறார்கள்.

Advertisement

Advertisement

சொத்து தகராறில் மாமியார் கொடுமை செய்ததாக மருமகள் பொய்வழக்கு தொடுக்க, மாமியார் காவல் நிலையத்திலும், ஜாமீன் கிடைக்கும் வரை சிறைச்சாலையிலும் குடும்பம் அடையும் அல்லல்களை துல்லியமாக விவரிக்கும் கதை 'அந்த ஒரு நாள்'.

மூச்சுத் திணறல் என்று சாதாரண சோதனைக்காக மருத்துவமனை சென்ற கணவரை ஐசியு-வில் வைத்து இதயநோய், நுரையீரல் நோய், நரம்பு நோய் என்று மருத்துவமனை பட்டியலிட்டுக்கொண்டே போகிறது. ஆகவே, யாருக்கும் சொல்லாமல் கணவரை வீட்டுக்கு டிஸ்சார்ஜ் செய்து அழைத்து வருகிறார்.

நம் வீட்டில் இறப்பதுதான் அப்பாவுக்கு 'அமைதி' தரும் என்கிறார் தாய்.

வெளிநாடு சென்று, அந்நாட்டு பெண்ணை மணந்து பெற்றோரை மறந்துவிட்ட இளைஞன், பல ஆண்டுகள் கழித்து வீடு வருகிறான். ஆனால், கொள்ளி வைக்க மட்டுமே சாத்தியமாகிறது.

வாழ்க்கையில் எல்லாவற்றிலும் 'டூ லேட்' என்று அழுகிறான். கடவுள்தான் என் சிறந்த 'நண்பன்' என்று சொல்லும் இளம்பெண்ணின் வாதங்கள் வியப்புடன் மகிழ்ச்சியையும் தருகிறது.

நாகை அருகே கீழ்வேளூரைச் சேர்ந்த ராஜி ரகுநாதனின் மொழிபெயர்ப்பு சரளமாகவும், தேவையான இடங்களில் தமிழகத்தின் இயல்பான பேச்சுமொழியாகவும் அழகாக அமைந்துள்ளது. நல்ல தொகுப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments